பேச்சுவார்த்தை தோல்வி; நள்ளிரவில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

திருத்தணியில் விசைத்தறி நெசவாளர்கள் - ஏஜெண்டுகளுக்கு இடையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், - தொழிலாளர்கள் நள்ளிரவில் போராட்டம் செய்தனர்.

Update: 2024-02-23 03:08 GMT

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை மற்றும் திருத்தணி சுற்றுவட்டார் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி ஏஜெண்டுகளிடமிருந்து நூல் மற்றும் பாவுப் பெற்று லுங்கி உற்பத்தி செய்து கூலி பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதான கோரிக்கை உட்பட 7அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம்  நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தை சுமூக தீர்வு கட்டப்படாத நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை வருவாய்  கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடைபெற்றது. 

பேச்சுவார்த்தையில் விசைத்தறி நெசவாளர்கள்  மற்றும் ஏஜெண்டுகள் சார்பில் பிரதிநிகள்  பங்கேற்றனர்.  சுமார்  இரண்டு மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில்  பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது. இதனால்  ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட தொழிலாளர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர்  கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.   இந்த நிலையில் பொதட்டூர்பேட்டையில் சுமார் 1000 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்களும் பங்கேற்ற நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News