நியாய விலை கடை, அங்கன்வாடி - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடியை  எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-17 08:01 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு ஆசிரியர் நகர் பகுதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.50லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்று புதிய நியாய விலைக் கடையினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி,அதன் பின் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை,அரிசி,பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினார். மேலும் கூடியிருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும்,பொது மக்களுக்கும் இனிப்புகளையும் அவர் வழங்கினார்.

இதேபோல் வெங்கடாபுரம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 14.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வந்து பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,ஆணையர் செந்தில் முருகன்,மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் சாந்தி ஸ்ரீநிவாசன் , மாமன்ற உறுப்பினர்கள்,திமுக பிரமுகர்கள் வடமலை ,நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் , அங்கன்வாடி மையம், நியாய விலை கடை , பள்ளி கூடுதல் கட்டிடம் என தொடர்ந்து தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிகம் பயன்பெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News