ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மூங்கில் மரங்கள்

ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டில் விழுந்த மூங்கில் மரங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-11 10:01 GMT

சாலையில் விழுந்த மூங்கில் மரங்கள்

ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டில் விழுந்த மூங்கில் மரங்கள் சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. 

  சாலையின் இருபுறமும் மூங்கில் மரங்கள் ஏராளமாக வளர்ந்து நிற்கின்றன. இந்த சாலையில் தினமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் திம்பம் அருகே அரேப்பாளையம் பிரிவு அருகே விழும் நிலையில் இருந்த மூங்கில் மரங்கங்கள் எப்போது வேண்டும் என்றாலும் சாலையில் விழந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.

இது குறித்து வாகன ஓட்டிகள் ஆசனூர் வனத்துறையினர்க்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் உடனடியாக சென்று ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூங்கில் ஜேசிபி கொண்டு மரத்தை கீழே தள்ளிவிட்டனர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் ெதாடர்ந்து ஜேசிபி வாகனத்தை கொண்டு சாலையில் கிடந்த முறிந்த மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து போக்குவரத்து தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வனப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags:    

Similar News