குடும்ப பிரச்சினை: பெண் தூக்கிட்டு தற்கொலை!

குடும்ப பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-30 07:55 GMT

பைல் படம் 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமம் வெண்ணிலா புரம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (35).இவர் லாரி டிரைவர்.இவரது மனைவி லாவண்யா (30). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 1 வயதில் ஆண் பிள்ளை உள்ளனர். இந்நிலையில் சசிக்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட லாவண்யா இன்று விடியற்காலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சமையல் அறைக்கு சென்று தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது கணவர் சசிக்குமார் காலை தூங்கி எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததால் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் இருக்கும் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News