இறந்த ஆட்டுக்குட்டியுடன் விவசாயி தர்ணா போராட்டம் !

பழனியருகே தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததால் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரினால், ஊராட்சித்தலைவர் நாய் ஒன்றுக்கு 500ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறி இறந்த ஆட்டுக்குட்டியுடன் விவசாயி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-06 12:08 GMT

போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது கோதைமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பண கவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். விவசாயியான‌ இவருக்கு சொந்தமாக 10ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் ராஜேந்திரன் வளர்த்துவந்த ஆடுகளை கடித்ததில் 3ஆடுகள் உயிரிழந்தது. மேலும் ஒரு ஆடு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றால், நாய் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர், விவசாயி ராஜேந்திரனிடம் லஞ்சம் கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்த ஆட்டுக்குட்டி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு பழனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அலுவலக வாசலில் ஆட்டுக்குட்டியுடன் அமரந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News