விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

பொன்னமராவதியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-12-29 13:10 GMT

பொன்னமராவதியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. 

பொன்னமராவதியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.

விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரஹ்மத்நிஷா பேகம் முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை சார்பில் நடப்பாண்டு செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் இடுபொருள்கள் நெல், தென்னை பயிறு, முன்னோட்டங்கள் மற்றும் உயிர் உரங்கள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் வேணி பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பிக்கும் முறை உயிர் உரம் பயன்பாடு பற்றியும் துணை வேளாண்மை அலுவலர் முருகன் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் தொழில்நுட்ப மேலாளர் சத்தியபாமா அட்மா திட்டத்தின் நடப்பாண்டு வர பெற்றுள்ள நிதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விலக்கி கூறினார்.

Tags:    

Similar News