குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு வேண்டுகோள்

குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு வேண்டுகோள்

Update: 2024-07-05 11:22 GMT

குறுவை நெல் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிட புதிப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் நடப்பு குறுவை சாகுபடி பயிருக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.  நமது தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் காரீப் சிறப்பு பருவத்தில் குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்துகொள்ள ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமிய தொகை ரூ.730- ஆகும். ஒரு ஏக்கருக்கான காப்பீடு தொகை ரூ.36,500- இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்திட கடைசி நாள் வரும் 31.07.2024 ஆகும்.  இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி-1434), வங்கி புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.  காப்பீடு செய்யும்போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று கொள்ள வேண்டும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு, தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் அனைவரும் பயனடையலாம். கடைசிநேர இன்னல்களை தவிர்த்திடுமாறும்" கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News