கையை கடிக்குது வெள்ளரி, கீரை வாட்டத்தில் விவசாயிகள்!
கையை கடிக்குது வெள்ளரி, கீரை வாட்டத்தில் விவசாயிகள்.
Update: 2024-04-30 05:21 GMT
புதுக்கோட்டையை அடுத்த திருக்கட்டளை சேர்ந்தவர்கள் முருகேசன் புவனேஸ்வரி தம்பதி ஒரு ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர் சோளம் பயிரிட்டு இருந்த இவர்கள் அதை அறிவுடை செய்த பின்னர் கோடை காலத்தை முன்னிட்டு வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர் கோடை காலத்தில் வெள்ளரிக்காய் மற்றும் பழத்துக்கு வரவேற்பு இருந்தாலும் மற்ற பழங்களைப் போல அதிக விலைக்கு விற்க முடியாது என்பதால் கூடுதல் வருமானம் பார்ப்பது சிரமமாக உள்ளதாக தம்பதியினர் தெரிவிக்கின்றனர். சாகுபடி மற்றும் அறுவடை செலவை கணக்கிடும்போது பெரிய அளவில் லாபம் இருப்பதில்லை. நாலு அல்லது ஐந்து வெள்ளரிக்காய்கள் கொண்ட ஒரு கட்டு எங்களிடம் இருந்து பத்து ரூபாய்க்கு வாங்கும் வியாபாரிகள் அதை 20 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. நாங்கள் நேரடியாக விற்பனை செய்தால் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என்றனர். இதுபோல் பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் விவசாய தம்பதிகளான கோபால், செல்வராணி குடும்பத்தினர் இப்போது கீரை சாகுபடி செய்துள்ளனர் சிறுகீரை, அரைக்கீரை, தண்டு கீரை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். ஆனால் கலை எடுக்க ஆட்கள் பற்றாக்குறை வறட்சி ஆகியவற்றால் போதிய விலை கிடைப்பதில்லை என்று கவலை தெரிவிக்கின்றன.