விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி தொடர் போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு 3-வது நாளாக விவசாயிகள் தாராபுரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-28 10:58 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி தொடர்3வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டிகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உப்பாறு விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் செய்தும் பலமுறை அரசு பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்ததை தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக அப்பகுதி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியும் வண்ணம் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர் திருமூர்த்தி அணையின் உபரி நீரை இவர்களுக்கு வழங்காததால் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்கக்கூடிய இரண்டு டிஎம்சி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்காமல் ஏமாற்றுவதாகவும். அதனால் அரசு ஆணையே சட்டத்தையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதாகவும் கருதி அரசையும் அரசு அதிகாரியும் கவனத்தை ஏற்கும் வண்ணம் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் உப்பாறு அணை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News