தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள் பெரியநத்தம் விவசாயிகள் அச்சம்!!
காஞ்சிபுரம் அருகே விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Desk
Update: 2024-04-08 08:50 GMT
விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தில், விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கு வழங்க சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், விவசாய நிலம் வழியாக செல்லும் மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால், கனரக அறுவடை இயந்திரம் வாயிலாக நெற்பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், விளைபொருட்களை லாரியில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பெரியநத்தம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்."