தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.28 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-02-23 12:10 GMT
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் பிப்.28 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கலாம். எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.