சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: தேதி அறிவிப்பு
நவம்பர் 24ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு;
By : King 24X7 News (B)
Update: 2023-11-20 13:05 GMT
மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24.11.23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்