தேமடைந்த கண்மாய் கலுங்கு உடையாமல் இருக்க மணல் மூடைகளை அடுக்கிய விவசாயிகள்
சி.கரிசல்குளத்தில் 7 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள கண்மாய் கலுங்கை சரிசெய்ய பலமுறை கோரிக்கைவைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் கலுங்கு உடையாமல் இருக்க விவசாயிகள் மணல் மூடைகளை அடுக்கியுள்ளனர்;
Update: 2024-01-05 08:15 GMT
தேமடைந்த கண்மாய் கலுங்கு உடையாமல் இருக்க மணல் மூடைகளை அடுக்கிய விவசாயிகள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, சின்னகண்ணனூர் ஊராட்சியில் உள்ள சி.கரிசல்குளத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இதன் மூலம் 250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர். இந்த கண்மாய் கலுங்கு 7ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கண்மாய் நிரம்பி உள்ள நிலையில் கலுங்கு உடைந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகளே களத்தில் இறங்கி மணல் மூடைகளை வைத்து அடைத்து வருகின்றனர்