விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் போராட்டம்
விருத்தாசலம் அருகே விவசாயிகள் போராட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-27 16:28 GMT
விருத்தாசலம் அருகே விவசாயிகள் போராட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க கனரக வாகனங்கள் வருவதைத் தவிா்க்கவும், சேலம், திருச்சி, புதுச்சேரி, கடலூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்வோா் நகருக்குள் வராமல் எளிதில் செல்லும் வகையிலும் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் புறவழிச் சாலையை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக சாலையோரம் சுமாா் 6 அடி உயரம் கொண்ட வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.