சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விளை நிலங்கள் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-25 12:09 GMT

விவசாயிகள் எதிர்ப்பு

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தில் முதல் கட்டமாக ஓடுபாதை விரிவாக்கம் செய்ய விளைநிலங்கள் நான்கு கிராமத்தில் இருந்து கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி அரசு பள்ளியில் நில எடுப்பு வட்டாட்சியர்கள் வள்ளமுனியப்பன்,

மகேஸ்வரி மற்றும் காடையாம்பட்டி வட்டாட்சியர் ஹசீனாபானு ஆகியோர் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது நான்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் விமான நிலைய விரிவாக்க பணிக்காக விளை நிலங்களை கொடுக்க மாட்டோம் எனவும், அப்படி கொடுக்கும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு இரண்டு கோடி ரூபாய் தர வேண்டும்,

இல்லையென்றால் விவசாய நிலம் எவ்வளவு எடுக்கப்படுகிறதோ அதே அளவு மாற்று விவசாய நிலம் கொடுக்க வேண்டும் எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags:    

Similar News