வாழை, வெற்றிலை பயிா்களுக்கு தண்ணீா் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தொட்டியத்தில் சாகுபடி செய்துள்ள வாழை வெற்றிலை பயிா்களை காப்பாற்ற வாய்க்காலில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி தொட்டியம் வட்டாட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

Update: 2024-03-20 07:24 GMT

மனு அளிக்க வந்த விவசாயிகள் 

தொட்டியம் பகுதியில் அரசலூா், வரதராஜபுரம், மகேந்திரமங்கலம், சீனிவாசநல்லூா், ஏரிகுளம், சித்தூா், மணமேடு, திருஈங்கோய்மலை உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, பயிா்கள் கோடை வெப்பத்தில் தண்ணீா் இன்றி கருகும் சூழ்நிலையில் உள்ளது. இவற்றை காப்பாற்ற காவிரியின் வடகரை பகுதியில் கொரம்பு அமைத்து மெயின் வாய்க்கால், மேட்டு வாய்க்கால், சின்னவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொட்டியம் வட்டாட்சியரகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுவை வழங்கினா். மேலும், ஒருவார காலத்துக்குள் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்காவிடில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சோ்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக வட்டாட்சியரிடம் அறிவித்து சென்றனா்.
Tags:    

Similar News