ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-12-12 13:50 GMT

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகள் ,விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, கைவிட வலியுறுத்தி, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை சுனிவாசபுறத்தில் பேரணியாக சென்ற 300க்கு மேற்பட்ட விவசாயிகள், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிம்சன், தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் துரைராஜ் விளக்க உரையாற்றினார். விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை , கடுமையாக பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது, என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனுவினை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Tags:    

Similar News