வருமான சான்று வாங்கி தருமாறு கேட்ட மாணவியை தாக்கிய தந்தை

காரிப்பட்டியில் வருமான சான்று வாங்கி தருமாறு கேட்ட பிளஸ்-1 மாணவியை தாக்கிய தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;

Update: 2024-03-02 09:02 GMT

கோப்பு படம் 

சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் மாயவன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் கிருஷ்ணாதேவி (17). இவர் சுக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவரிடம் வருமான சான்றிதழ் வாங்கி கொண்டு வரும்படி ஆசிரியர்கள் கூறி உள்ளார்.

இதையடுத்து மாணவி கிருஷ்ணாதேவி நேற்று முன்தினம் வருமான சான்று வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கூறினார். அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் மாயவன் அனைத்தும் என்னிடமே கேட்பாயா? என கூறி திடீரென தனது மகளின் தலையில் கட்டையால் தாக்கினார்.

Advertisement

இதில் மாணவியின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே தந்தை தன்னை தாக்கியது குறித்து மாணவி வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மாயவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News