விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகளுக்கு சிகிச்சை
விபத்தில் மகள் எதிரே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 06:12 GMT
விபத்தில் பலி
மயிலாடுதுறை மூங்கில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது50). நேற்று மாலை 6 மணி அளவில் இவர் மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் கோவிந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கல்யாணசுந்தரம் மகள் கீர்த்தனா (23) படுகாயத்துடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.