கோட்டார் காவல் நிலையம் முன்பு பெண் சடலம்
கோட்டார் காவல் நிலையம் முன்பு இருந்த பெண் சடலத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-06 03:45 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு சுமார் 70 வயது மதிக்கத்தக்க பொன் சடலம் ஒன்று நேற்று கிடந்தது. இதை மீட்ட போலீசார் சடலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்த பெண் நீலம் கலந்த சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.