புனித சூசையப்பர் ஆலய திருவிழா

நத்தம் அருகே செந்துறையில் உள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழாவையொட்டி புனிதர்களின் சப்பர பவனி நடந்தது.

Update: 2024-05-09 09:34 GMT

புனித சூசையப்பர் ஆலயம் 

நத்தம் அருகே செந்துறையில் உள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 5ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் பங்குத் தந்தையர்கள் இன்னாசிமுத்து, மரியபிரான்சிஸ் பிரிட்டோ, மைக்கேல்ராஜ், ஆசீர் ஜான்சன், செபாஸ்டீன் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.

கடந்த 6ம் தேதி மாலை புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல் வைத்தல், இரவு புனித செபஸ்தியார் வேண்டுதல் சப்பரபவனியும், தொடர்ந்து அன்பின் விருந்தும் நடந்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை பொது பொங்கல் வைத்தலை தொடர்ந்து இரவு ஆடம்பர திருவிழா திருப்பலி, நற்கருணை பவனியும், அனைவருக்கும் அன்பின் விருந்தும் நடந்தது.நேற்று அதிகாலை மற்றும் மாலையிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனிதர்களின் பவனி நடந்தது.

Tags:    

Similar News