ஊத்தங்கரையில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து ஊழியர் போராட்டத்தால் ஊத்தங்கரை பேருந்து பணிமனையில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கபட்டன.;

Update: 2024-01-09 08:56 GMT

பேருந்துகள் இயக்கம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பேருந்து பணிமனையில் இருந்து 19 உள்ளூர் பேருந்துகள் மற்றும் 23 மப்சல் பேருந்துகள் என என மொத்தம் 42அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     

Advertisement

 இதனால் பெங்களூர், சென்னை ,சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் வெளியூர் பயணிகளும் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.   இந்த சூழ்நிலையில் தற்போது வரையிலும் ஊத்தங்கரை பேருந்து பணிமனையில் இருந்து 12 உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. 30 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.

Tags:    

Similar News