செய்யாறு அருகே திண்ணை பிரச்சாரம்

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரத்தை தென்இலுப்பை பகுதியில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-02-29 11:24 GMT

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் கிழக்கு ஒன்றியம் தென்இலுப்பை கிராமத்தில் தேர்தல் பணிக்குழுவின் எண் 10 வாக்குச்சாவடிகளின் சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நோட்டீசை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி வீடு வீடாக சென்று திமுக ஆட்சி செய்த இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரம்  செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் லோகநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி,அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார்,  அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திராவிட முருகன்,  அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News