வாணியம்பாடியில் எழுத படிக்க தெரியாமல் உள்ளவர்கள் களப்பணி தொடக்கம்
வாணியம்பாடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி எழுத படிக்க தெரியாமல் உள்ளவர்கள் களப்பணி தொடங்கியது
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 12:47 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியிள் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி எழுத படிக்க தெரியாமல் உள்ளவர்கள் களப்பணி தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் பூ. முருகேசன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர் S.வெற்றிவேல் கருணை இல்ல நிறுவனர் சுபாஷ் சந்திரன் முன்னிலை வைத்தார்கள் .பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சி பிரபு ,ரமேஷ் ,அரவிந்தன் சசிகலா,சுமதி, சங்கீதா உடன் இருந்தார்கள். கருணை இல்லத்தில் 25 பேருக்கு கணக்கெடுப்பு நடந்தது. பெருமாள் பேட்டை பகுதியில் 15 பேருக்கு எழுத படிக்க தெரியாமல் இருப்பதை கண்டறியப்பட்டது.