ஆடல், பாடலுடன் இறுதிக்கட்ட பிரச்சாரம்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஆடல், பாடலுடன் கட்சியினர் வாக்குகளை சேகரித்தனர்.

Update: 2024-04-17 12:31 GMT
 கரூர் நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டான அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் நின்று இறுதியாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கூடும் மக்கள் பொழுதுபோக்குக்காகவும், கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காகவும் நடன கலைஞர்கள் பாட்டுப்பாடி நடனமாடி பொது மக்களை கவரும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News