நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

அரியலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.

Update: 2024-06-25 04:00 GMT

 அரியலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.

.அரியலூர், ஜூன் 24- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்ப்டடது.

கூட்டத்துக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 479 கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவ வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமி, கரையவெட்டி கிராமத்தைச் சேர்ந்த திவ்யபிரியா, வஞ்சினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரீத்திஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000}க்கான காசோலை வழங்கினார்.

பின்னர், கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தமிழ்செல்வம் மற்றும் 4}ஆம் ஆண்டு பயிலும் ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ரவீந்திரன் ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000}க்கான காசோலையினையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். :

Tags:    

Similar News