அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி
By : King 24X7 News (B)
Update: 2023-11-17 13:33 GMT
நிதியுதவி வழங்கிய ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், தாளப்பட்டி கிராமத்தை சேர்நத சக்திவேல் மற்றும் கதிரேஷ் ஆகியோர் 18.10.2017 அன்று கொடையூர்அமராவதி ஆற்றில் மூழ்கி உயிர் இழந்தையொட்டி முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2,00,000 நிதியுதிவி ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றது.
மேற்படி இறந்து போன சக்திவேல் என்பவரின் மகளும், இறந்து போன கதிரேஷ் என்பவரின் சகோதரியும் வாரிசுதாரருமான செல்வி .கார்த்திகா என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2,00,000- த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார் . இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன் ஆகியோர் உள்ளனர்.