தேர்தல் பணியில் உயிரிழந்த சாலைப்பணியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் பனியின் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாலை பணியாளர் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நிதியுதவி காசோலையை வழங்கினார்.

Update: 2024-06-25 06:42 GMT
காசோலை வழங்கிய ஆட்சியர் 
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ன் போது நெடுஞ்சாலைத் துறையில் மடத்துக்குளம் வட்டத்தில் சாலைப் பணியாளராக பணியாற்றி வந்த ராஜா என்பவர் தேர்தல் பணியின் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்தமைக்காக அரசினால் வழங்கப்படும் கருணை தொகைக்கான காசோலையை அவரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார். உடன் காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஆகியோர் இருந்தனர்.
Tags:    

Similar News