திருப்பூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
திருப்பூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 1.5 டன் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்; 1.5 டன் பறிமுதல்! திருப்பூர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகர நல அதிகாரி (பொறுப்பு) கலைச்செல்வன் மற்றும் சுகாதார அதிகாரிகள் சே பிச்சை, ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 15 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. 1.5 டன் பிளாஸ்டி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.