விவசாய நிலத்தில் தீ பற்றி எறிந்தால் பரபரப்பு
சிங்கப்புணரி பகுதியில் விவசாய நிலத்தில் தீ பற்றி எறிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
Update: 2024-03-02 17:23 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மரம், செடி, கொடிகள், புற்கள், காய்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் கோட்டை நெடுவயல் வெட்டுகாடு பகுதியில் பொன்னழகு என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. வெயில் காரணமாக புற்களில் பற்றிய தீ பின்னர் காய்ந்த மரம், செடி, கொடி புற்களில் தீ மள மளவென எரியத் தொடங்கியது. தீ எரிவதை கண்ட அப்பகுதி கிராமமக்கள் தீயணைப்பு துறைக்கும் உலகம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டு தீயை அணைக்கத் துவங்கினர். தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சுமார் 5 ஏக்கர் தரிசு நிலங்கள் எரிந்து சாம்பாலாகின, மேலும் தோட்டத்தின் வேலிகள் பற்றி எரிய துவங்கியது. இதில் நெருப்பின் வெப்பம் தாங்காமல் சுமார் 40 பலாகன்றுகள் சேதமடைந்தன. தரிசு காட்டில் நின்ற பனைமரங்கள் காட்டுமரங்கள் எரிந்து சாம்பலாகின. தீ பற்றிய சம்பவம் குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.