பிரபல ஜவுளி கடையில் தீ விபத்து

அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடையில் திடீரென தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-13 14:37 GMT

தீ விபத்து 

திருப்பூர் மாவட்ட,ம் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

அவிநாசி மற்றும் திருப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் இரு வாகனங்களில் வந்து கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ பரவாமல் அனைத்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News