தீ விபத்தால் பாத்திரக்கடை சேதம்

தீ விபத்தால் பாத்திரக்கடை சேதமடைந்துள்ளது.;

Update: 2023-12-11 11:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வெள்ளாளப்பட்டி சேர்ந்தவர் யோகராஜ். இவர் ஒலியமங்கலத்தில் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவில் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது நள்ளிரவு 1மணி அளவில் யோகராஜன் கடை தீப்பிடித்து எரிவதாக கடைக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தரவே விரைந்து வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்தது.இதில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து காரையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து அவரது மகனும் அதிமுக நிர்வாகியான பிகே.வி.குமாரசாமியை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பிகே.வி.குமாரசாமி பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 20,000 நிவாரணம் வழங்கியதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர்கள் காசி.கண்ணப்பன் மற்றும் ஆலவயல் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்..

Tags:    

Similar News