பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆறுதல் கூறினார்.;
Update: 2024-05-10 12:34 GMT
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆறுதல் கூறினார்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பெயரில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இந்த பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சந்தித்து ஆறதல் கூறினார். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிர் இழந்த உறவினர்களையும் நேரில் சந்தித்து இரங்கலை தெரிவித்தார்.பின்னார் அதிகாரிகளிடம் கூறிய ஆட்சியர் விரைவாக உடற்கூர்வு ஆய்வை நடத்த உத்தரவு பிறப்பித்தார்.