விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பட்டாசு வெடித்துகொண்டாட்டம்
பெரம்பலூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 16:06 GMT
இனிப்புகள் வழங்கிய ரசிகர் மன்றத்தினர்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்று புதியதாக கட்சி ஆரம்பித்ததை கொண்டாடும் விதமாக, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள்வழங்கி கொண்டாடினார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றி முழக்க கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.