சிவகாசியில் பட்டாசு தொழில் மேன்மையடைய மெகா யாகபூஜை

சிவகாசியில் பட்டாசு தொழில் மேன்மையடைவும்,இடையூறுகள் விலகவும்,விபத்து நடைபெறாமல் இருப்பதற்காகவும் மெகா யாகபூஜை நடைபெற்றது.

Update: 2024-03-29 10:06 GMT
யாக பூஜை 

சிவகாசியில் பட்டாசு தொழில் சிறப்பாக நடைபெறுவதற்காக, மெகா யாகபூஜை... விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் அடையாளமாக இருப்பது பட்டாசு தொழில் தான்.கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல்வேறு இடையூறுகள் தொடர்ந்து ஏற்பட்டு,அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இதனை அடுத்து,பட்டாசு தொழில் மேன்மையடையவும், இடையூறுகள் விலகவும், விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்காகவும்,பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகபூஜைகள் செய்வது சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து டான்பாமா சங்க தலைவர் கணேசன் கூறுகையில் பட்டாசு தொழில் சிறப்பாக நடைபெறுவதற்காக சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு யாகங்கள் நடத்தப்பட உள்ளது.ஜெய் ஸ்ரீமன் நாராயணா ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ எம்பெருமானார் திருவருளால் சிவகாசி ஃபயர் ஒர்க்ஸ் அசோசியேஷன் சகல மங்கல காரிய ஜெய நலன்களுக்காக ஸ்ரீமகா சுதர்சன,ஸ்ரீபூவராக ஸ்ரீசௌபாக்கிய மகாலட்சுமி, ஸ்ரீலட்சுமி நரசிம்ம,ஸ்ரீபஞ்ச சூக்த,ஸ்ரீதுர்கா சூக்த,மூல மந்திர ஜெப,ஹோமங்கள்.ஹோமம் மற்றும் பூர்ணாகதி சுப நிகழ்ச்சிகள் மகாள ஶ்ரீ திருக்கோஷ்ட்டியூர் பெருமாள் அடிகளார் மாதவன் சுவாமிகள் தலைமையில் ஆச்சாரத்துடன் நடைப்பெற்றன.

இதில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

Tags:    

Similar News