குளிர்சாதன கிடங்கு வசதி கொண்ட மீன் மார்க்கெட்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ரூ. 13.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குளிர்சாதன கிடங்குகளுடன் கூடிய மீன் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது.

Update: 2024-02-08 12:54 GMT

திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார்மேடு பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய மற்றும் இறைச்சி மார்க்கெட் கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேலானதால் அதை எடுத்துவிட்டு புதிய மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் கட்ட திருச்சி மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி பழைய மார்க்கெட் கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ரூபாய் 13.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மீன் மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன முறையில் குளிர்சாதன கிடங்குகளுடன் கட்டப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தான் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்தன. இப்போது புதிய மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் 25,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது மேலும் இரண்டு மாடுகளைக் கொண்டது அதில் முதல் தளம் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இரண்டாவது தளம் குளிர்சாதன வசதியுடன் பெரிய அளவிலான வணிகர்களுக்கும் கட்டப்பட்டுள்ளது மொத்தம் 148 கடைகள் உள்ளன.

வாகனங்கள் நிறுத்துமிடம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு மற்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். .இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மற்றும் மண்டல தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News