போதிய வரத்து இல்லாததால் நாகையில் மீன் விலை உயர்வு

நாகை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியர்கள், வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். போதிய வரத்து இல்லாததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

Update: 2024-02-26 01:41 GMT

மீன் வாங்க குவிந்த கூட்டம் 

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி,கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த 8 நாட்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை 3 மணி வரை நூற்றுக்கு மேற்பட்ட படகுகள் கரை திரும்பினர். 

மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிறாக இறால் நண்டுகள் வலையில் கிடைத்துள்ளதாகவும், பெரும்பாலான படகுகளில் குறைந்த விலைக்கு போகக்கூடிய குறைந்த அளவிலான கனவா, நெத்திலி, சங்கரா, கானாங்கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் வலையில் சிக்கியதால் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்து கடலுக்குச் சென்ற தங்களுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளதாகவும் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மீனவர்கள். மீன் வரத்து குறைந்த காரணத்தால் மீன்களின் விலை சற்று அதிகரித்து உள்ளதாக மீன் பிரியர்கள் தெரிவித்தனர். இறால் 650 முதல் 700 கனவா 450 தரத்தை பொறுத்து. நண்டு 500 வஞ்சிரம் 700,முதல் 900 வவ்வால் 1150,முதல்1300 சங்கரா 300 சீலா 400 காலா 500 கிழங்கான் 400 நெத்திலி 200 பாறை 300,முதல்400 கடல் விரா 600 பால் சுறா 500 விற்பனை செய்யப்படுகிறது. மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் குவிந்த மீன்பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். போதுமான மீன்கள் கிடைக்காததாலும் விலை ஏற்றம் காரணமாகவும் கேரளா வியாபாரிகள் மீன்களை வாங்காமல் துறைமுகத்தில் முகாமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News