ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு
நாகர்கோவில் டவுன் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தவறி விழுந்த மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2024-05-29 06:41 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரெய்மண்ட் (60). இவர் மீன்பிடி தொழிலாளி. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த இவர் மீண்டும் கேரளா செல்வதற்காக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் ரெய்மன்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.