ஆழ் கடலில் தவறி விழுந்த மீன் பிடி தொழிலாளி உயிரிழப்பு 

தேங்காப்பட்டணம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து மின் பிடி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2024-01-17 05:45 GMT
ராஜன்
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே இரவிபுத்தன் துறையை சேர்ந்தவர் ஜோஸ் ஆண்டனி. இவர் சொந்தமாக விசைப்பட வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது படகில் மார்த்தாண்டம், கண்ணகோடு பகுதியை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ராஜன் (49) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.       கடந்த 3ஆம் தேதி வழக்கம் போல் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகு மீன்பிடிக்க சென்றது. இதில் ராஜனும் வழக்கம்போல் தொழிலுக்கு சென்றார்.  9-ம் தேதி தேங்காப்பட்டணம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ராஜன் எதிர்பாராமல் திடீரென தவறு கடலில் விழுந்தார்.         உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கழித்து நேற்று அவர்களது படகு தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தது. பின்னர் தொழிலாளி ராஜன் உடல் கரை சேர்க்கப்பட்டது.        இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News