குமரியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடும் மீனவர்கள் !
குமரியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திர விசைப்படகுகள் கரை திரும்புவது வழக்கம். இதற்காக ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-28 10:32 GMT
மீனவர்கள்
குமரி மாவட்டம் தேங்காபட்டணம், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 1500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரக் கணக்கிலான கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். இதனால் கடந்த சில நாட்களாக குமரியில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 31 ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். பண்டிகைகளை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திர விசைப்படகுகள் கரை திரும்புவது வழக்கம். இதற்காக ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளது. கரை திரும்பிய விசைப்படகுகள் அந்தந்த மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் அனைத்து படகுகளும் கரை திரும்பி விடும் என மீனவர்கள் தெரிவித்தனர். கரை திரும்பும் விசைப்படகினர் இன்றிரவு ஆலயங்களில் நடக்கும் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நாளை புனித வெள்ளிக்கிழமை சிலுவைப்பாடு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு 31 ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பின்னர் ஏப்ரல் 1 ம் தேதிமுதல் விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர்.