ஐவர் கால்பந்து போட்டி: சென்னை அணி கோப்பையை வென்றது!

நாசரேத்தில் நடந்த ஐவர் கால்பந்து இறுதிப் போட்டி யில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

Update: 2024-05-15 15:41 GMT

நாசரேத்தில் நடந்த ஐவர் கால்பந்து இறுதிப் போட்டி யில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத் தில் மர்கரஷிஸ் கிளப் மற்றும் வெஸ்டண் கிளப் சார்பில் மாபெரும் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தது. போட்டியை தூய யோவான் பேராலய உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமார் ஜெபித்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 22 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் சென்னை ஒய்எம்சிஏ அணியும், அருப்புக்கோட்டை லியோ கால்பந்து அகடமி அணியும் மோதின.இதில் 5: 4 என்ற கோல் கணக்கில் சென்னை ஒய் எம் சிஏ அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு ஒய்வு பெற்ற ரயில் நிலைய அதிகாரி ஜாண்சன் தலைமை வகித்து வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம் வழங்கினார். 2 வது இடத்தை பிடித்த அருப்புக்கோட்டை அணிக்கு டானியும், 3 வது இடத்தை பிடித்த காயல்பட்டினம் அணிக்கு ரசலும்,4 வது இடத்தை பிடித்த நாசரேத் அணிக்கு செல்வக்குமாரும் பரிசுகளை வழங்கினர்.ஏற்பாடுகளை மர்காஷிஸ் கிளப் செயலர் அருண் சாமுவேல், பெல்டன், வெஸ்டண் கிளப் உறுப்பினர் சில்வானஸ், வினேத் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News