காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை திடீர் சாவு

இரண்டு நாளாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் திடீரென காய்ச்சல் அதிகரித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-24 13:19 GMT

குழந்தையை கொலை செய்த தாய்

சேலம் மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் மற்றும் தட்ப வெட்பநிலை மாறி மாறி நிலவ வருவதால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சளி, இருமல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் அரசன். இவரது மனைவி பூங்கொடி . இவர்களுக்கு வர்ணிஷா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் குழந்தைக்கு மருந்து கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வீராணம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News