பல்லடம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

பல்லடம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-17 16:43 GMT

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி (48), இவர் கடந்த 15ஆம் தேதி தாராபுரம் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து ஸ்ரீதேவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்து ஸ்ரீதேவியை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து ஸ்ரீதேவி அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விருதுநகரைச் சேர்ந்த முரளிதரன் (24), சிவகங்கையை சேர்ந்த  துரைசிங்கம் ( 20) சங்கர் (30) , ஜெகன் (26), ஆண்டியப்பன் (37) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது வழிப்பறி சம்பவம் மட்டுமல்லாது அவிநாசி பாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டது

தெரியவந்தது. தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து 2  சவரன் நகை செல்போன் மற்றும் 2  இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்

Tags:    

Similar News