கஞ்சா பொட்டணங்கள் வைத்து இருந்த ஐந்து பேர் கைது
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்து ஆர் எஸ் மங்கலம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 12:19 GMT
கஞ்சா பொட்டணங்கள் வைத்து இருந்த ஐந்து பேர் கைது
கஞ்சா பொட்டணங்கள் வைத்து இருந்த ஐந்து பேர் கைது
கஞ்சா பொட்டணங்கள் வைத்து இருந்த ஐந்து பேர் கைது
கஞ்சா பொட்டணங்கள் வைத்து இருந்த ஐந்து பேர் கைது
கஞ்சா பொட்டணங்கள் வைத்து இருந்த ஐந்து பேர் கைது
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நோக்கங்கோட்டை விளக்கு அருகில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த கரண் வயது(23),வெங்கடேஸ் வயது(23),மதன்குமார் வயது (22),ஹரிகரசுதன், முகமது நப்பிஸ் ஆகியோர் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு கஞ்சா பொருளை பிளாஸ்டிக் கவரில் சிறு பொட்டலங்களை பிரித்து போட்டுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர், விஷ்ணுவர்தன் மற்றும் போலீஸ்காரர்களை கண்டதும் ஐந்து பேரும் ஓட ஆரம்பித்தனர். அவர்களை விரட்டிச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தனை கீழே தள்ளிவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தனர்.போலீசார் அவர்களை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த 2.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது செய்து இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை செய்து வருகிறார்.