இதய துடிப்பை சரி பண்ணுங்க மதுரை எம்.பி கேள்வி!

சுண்டு விரல் காயத்தை விடுங்க.. இதய துடிப்பை சரி பண்ணுங்க.. இது இப்ப முக்கியமா? மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2023-12-21 09:36 GMT

மதுரை எம்பி வெங்கடேசன்

சுண்டு விரல் காயத்தை விடுங்க.. இதய துடிப்பை சரி பண்ணுங்க.. இது இப்ப முக்கியமா? மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டமான கேள்வி! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் ஒருபக்கம், இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் மறுபக்கம், இதற்கு நடுவில் மிமிக்ரி சம்பவம் மறுபக்கம் என டெல்லியே அனலடித்து வருகிறது. இ

ந்நிலையில், மதுரை எம்பி வெங்கடேசனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் 2 நபர்கள் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நபர்களை மக்களவையிலிருந்த எம்பிக்களே மடக்கி பிடித்துவிட்டனர் என்றாலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி வருகிறார்கள்.

Advertisement

தற்போது, அவை நடந்துவருவதால், அமளியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.. நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் அவை நடவடிக்கைகள் மொத்தமாகவே முடங்கியுள்ளன.

எனவே, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சொல்லி, எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் உட்கார்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய தினம் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ராகுல் காந்தி வந்தபோது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார்.

முதுகெலும்பை வளைத்து குனிந்து நின்றபடி அவர், ராகுலை பார்த்து முதுகெலுப்பு இருக்கிறதா? என்பது பற்றி தன்கரை போலவே நடித்தும் காட்டினார். உடனே இதைப்பார்த்த சக எம்பிக்கள், கைதட்டி சிரித்தனர்.. இதை ராகுலும் தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து, ஜனாதிபதி அலுவலக எக்ஸ் தள பதிவில், "நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம். அதை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று கண்டனம் தெரிவித்தது. இந்த கண்டனத்துக்கும் பதிலடி வந்து விழுந்து கொண்டிருக்கிறது..

மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு ஆகிய விஷயங்களின் போது வாய் திறக்கவில்லை. மிமிக்ரி சம்பவத்திற்கு ட்வீட் வருகிறது. எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார் பாருங்கள் என்று மஹுவா மொய்த்ரா" கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட இந்த பதிவுக்கு, மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்..

தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவ: "மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களே! 144 எம்பிக்களின் சஸ்பெண்ட் பற்றிய உங்கள் கருத்தும் அறிவுரையுமே இன்று தேசத்தின் தேவை. எதிர்க் குரலே இல்லாத நாடாளுமன்றம் தன் ஜீவனை இழக்கிறது.

இதயத் துடிப்பை சீராக்க வேண்டிய நேரம் இது. சுண்டு விரல் "காயம்" பற்றி பிறகு கவனிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News