வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையால் பழநியில் உள்ள அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Update: 2023-12-19 05:35 GMT
பழநி, -கொடைக்கானல் மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழநி பகுதியில் பாலாறு-பொருந்தலாறு வரதமாநதி அணை, குதிரையாறு அணை உள்ளிட்ட அணைகள் ,பெய்து வரும் தொடர் மழையால் அதிக நீர்வரத்தை பெற்றுள்ளது. வரதமா நதி அணை சில மாதங்களாக நிரம்பி வழியும் நிலையில் மற்ற இரு அணைகளும் முழு அளவை எட்டியது.நேற்று முன்தினம் இரவு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்ததால் அணைகளுக்கு அதிக அளவு நீர்வரத்து ஏற்பட அணைகளுக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டது. கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.