வெள்ள நீர் விரைந்து வெளியேற்றப்படும்: மேயர் ஜெகன் உறுதி

தூத்துக்குடி பக்கிள் ஓடையின் மூலமாக வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். ;

Update: 2023-12-23 17:39 GMT

தூத்துக்குடி பக்கிள் ஓடையின் மூலமாக வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி பக்கிள் ஓடையின் மூலமாக வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை விரைவாக வெளியேற்றி வருகிறோம். தூத்துக்குடி மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் தற்போது வெள்ள நீர் வடிய தொடங்கி உள்ளது. மேலும் மீதமுள்ள பிரதான சாலைகளில் மற்றும் தெருக்களில் உள்ள நீரானது விரைந்து வெளியேற்றி தரப்படும் என்று உறுதியளிக்கிறோம். தூத்துக்குடி மாநகரின் பிரதான ஓடையும்  மாநகரைப் பொறுத்தவரை பக்கிள் ஓடையின் மூலமாக தான் பெரும்பாலான வெள்ள நீரானது வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகையால் அதில் எந்த தடையும் இல்லாமல் மழைநீர் செல்வதை பார்வையிட்டு தேவையான இடங்களில் அதிக திறன் வாய்ந்த மோட்டார் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார்.
Tags:    

Similar News