ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.;
Update: 2024-03-20 10:43 GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலங்களில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2500 கன அடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் படிப்படியாக நீரின் அளவு குறைந்து நேற்று மாலை முதல் தற்போது வரை வினாடிக்கு சுமார் 300 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.