பறக்கும் படை கெடுபிடி : பொதுமக்கள், வியாபாரிகள் அவதி!
தூத்துக்குடி மாவட்டத்தில் சோதனை என்ற பெயரில் பொதுமக்கள், கூலித் தொழிலாளிகள், வியாபாரிகளிடம் பறக்கும்படையினர் அத்துமீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஓரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது. இதன்காரணமாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் பொருட்களை பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அதிகாாி கவனத்திற்கு கொண்டு சென்று கையகப்படுத்தி வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பறக்கும் படை, நிலையாணைக் குழு, கண்காணிப்புக் குழு என பல்வேறு குழுக்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களோ, வாகனங்களை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் குடும்பத்தோடு செல்பவர்கள், கோயிலுக்குச் செல்பவர்கள், திருமணத்திற்காக மண்டபத்திற்கு பணம் செலுத்த செல்வோர், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் முறைப்படுத்துதல் என்ற பெயரில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் சோதனைகளில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சாதாரண தினக்கூலி தொழிலாளா்கள் வரை விட்டு வைக்காமல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தென்பாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாகனை சோதனையின் போது திமுக ஓன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான அவருடைய வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் திமுக சின்னம் பொறித்த தொப்பி கி செயின் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு 25 லட்சம் என்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா கொடுத்த தகவலின் படி வழக்கு பதிவு செய்து கார் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் முறையான ஆய்வுக்கு பின் இதன் மதிப்பு 53 ஆயிரத்து 500 என மதிப்பீட்டுள்ளனர்.
அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாாிகள் இது போன்ற மதிப்பீடுகள் தொியாமல் கடமைக்கு பணியாற்றுவதன் மூலம் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வதற்கு தயாராகி வருகின்றன. மேலும், வங்கிகளில் பணம் எடுத்தாலும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பழக்கம் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும். எனவே தேர்தல் ஆணையம் ரூபாய் 50,000 என்ற வரைமுறையை மாற்றிட வேண்டும் என்று வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.