டாஸ்மாக் பார்களில் பறக்கும் படை சோதனை

மதுபான பதுக்கல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள மதுபான பார்களில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2024-04-09 04:46 GMT

டாஸ்மாக் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 17ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் 19 -ம் தேதி நள்ளிரவு வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமை பெற்ற அனைத்து மதுபான கூடங்கள் ஆகியவை செயல்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.      

மூன்று நாட்கள் மதுபான கடை மூடப்படுவதால் மதுபான வகைகள் பதுக்கலை தடுக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி  இயங்கும் பார்களில் ரகசியமாக மதுபானங்கள் அனுமதி இன்றி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து மதுபான பார்களில் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.   இதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள மதுபான பார்களில் பறக்கும் படையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனை நடை பெற்று வருகிறது.

Tags:    

Similar News